Wednesday, July 15, 2009
சிண்டு முடியும் தமிழ் விண்ணுக்கு கண்டனம்
இன்னும் சிறு பிள்ளைதனமாக செய்திகளை விளியிடுவதை தமிழ் வின் நிறுத்திக்கொள்ளட்டும் .
சிண்டு முடிகிற வேலையை திமுக சார்பில் அதன் கொள்கை பரப்பு செயல் வீரர்கள் , " அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது " பொது என்ற முகமூடியில் ஈழத்தை நீர்த்து போக செய்யும் வேலைகளை செய்யாமல் இருந்தால் சரி .
"கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் " திமுக கரைவெட்டிகளுக்கு கூஜா தூக்கும் இம்மொவர் கூட்டணி மறக்காமல் இருபது ஆறுதல் தான்.
எனது கோபத்தின் காரணம் :
"கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் " என்ற வார்த்தை அரசியல கட்சிகளை ஈழ விடுதலை போரில் புறந்தள்ளுவது அல்லது அவர்களை அப்புறப்படுத்தி விட்டால் திமுக வின் கொள்கை எளிதாகிவிடும் . ஆம் திமுகவின் ஈழ கொள்கை என்பது என்னவென்று எல்லோருக்கும் தெரியும் தானே.
அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்பதை விட்டுவிட்டு , இந்திய தமிழக அரசாங்கம் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறந்து விட்டு இந்த இரு அரசாங்கங்களின் மீதுள்ள கோபத்தை தணிக்கும் பொருட்டு , கோரிக்கை மற்றும் போராட மட்டும் முடிந்த பிற அரசியல் கட்சிகளை ,அரசியல் வாதிகளை குறை கூறுவதில் அல்லது அவர்களின் பங்களிப்பினை ஏற்காது அவர்களை புறம் தள்ள முயற்சிப்பதில் இந்த மூவர் கூட்டணி இறங்கியுள்ளது.
இவர்களின் முயற்சிர்க்கு எப்படி சீமானும் மணிவண்ணனும் சமதிதார்கள் என்று தெரியவில்லை.
எங்களது கோபம் மூவர் கூட்டணி மீதுதான் எங்களது சந்தேகமும் அம்மூவர் மீதுதான்.
ஈழ போராட்டம் என்பது துரோகிகளின் கையில் சிக்கி அதன் மூலம் உண்மையான உணர்வு மலுங்கடிக்கப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் .
-அலெக்ஸ்
தமிழ் வின் வெளியிட்டுள்ள அந்த செய்தி இங்கே :
மதுரையில் சீமானின் "நாம் தமிழர்" ஈழப் போராட்டம்கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் கனல் குறையாமல் இன்னும் ஈழ நினைவாகவே இருக்கிறார் சீமான். முள் வேலிக்குள் முடங்கிப்போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
எதிர்வரும் 18 ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் என்ற பெயரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார் சீமான். 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டம். இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முள் கம்பிக்குள் அடைக்கப்பட்ட தமிழனின் அடிப்படை உரிமையை பெற்றுத்தர நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது.
நாம் தமிழர் என்பதை நிரூபிக்கும் வேளை இது. சீமானின் நாம் தமிழர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம்.
Subscribe to:
Posts (Atom)