Wednesday, July 15, 2009

சிண்டு முடியும் தமிழ் விண்ணுக்கு கண்டனம்


இன்னும் சிறு பிள்ளைதனமாக செய்திகளை விளியிடுவதை தமிழ் வின் நிறுத்திக்கொள்ளட்டும் .
சிண்டு முடிகிற வேலையை திமுக சார்பில் அதன் கொள்கை பரப்பு செயல் வீரர்கள் , " அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது " பொது என்ற முகமூடியில் ஈழத்தை நீர்த்து போக செய்யும் வேலைகளை செய்யாமல் இருந்தால் சரி .

"கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் " திமுக கரைவெட்டிகளுக்கு கூஜா தூக்கும் இம்மொவர் கூட்டணி மறக்காமல் இருபது ஆறுதல் தான்.

எனது கோபத்தின் காரணம் :
"கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் " என்ற வார்த்தை அரசியல கட்சிகளை ஈழ விடுதலை போரில் புறந்தள்ளுவது அல்லது அவர்களை அப்புறப்படுத்தி விட்டால் திமுக வின் கொள்கை எளிதாகிவிடும் . ஆம் திமுகவின் ஈழ கொள்கை என்பது என்னவென்று எல்லோருக்கும் தெரியும் தானே.


அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்பதை விட்டுவிட்டு , இந்திய தமிழக அரசாங்கம் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறந்து விட்டு இந்த இரு அரசாங்கங்களின் மீதுள்ள கோபத்தை தணிக்கும் பொருட்டு , கோரிக்கை மற்றும் போராட மட்டும் முடிந்த பிற அரசியல் கட்சிகளை ,அரசியல் வாதிகளை குறை கூறுவதில் அல்லது அவர்களின் பங்களிப்பினை ஏற்காது அவர்களை புறம் தள்ள முயற்சிப்பதில் இந்த மூவர் கூட்டணி இறங்கியுள்ளது.

இவர்களின் முயற்சிர்க்கு எப்படி சீமானும் மணிவண்ணனும் சமதிதார்கள் என்று தெரியவில்லை.
எங்களது கோபம் மூவர் கூட்டணி மீதுதான் எங்களது சந்தேகமும் அம்மூவர் மீதுதான்.
ஈழ போராட்டம் என்பது துரோகிகளின் கையில் சிக்கி அதன் மூலம் உண்மையான உணர்வு மலுங்கடிக்கப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் .
-அலெக்ஸ்


தமிழ் வின் வெளியிட்டுள்ள அந்த செய்தி இங்கே :

மதுரையில் சீமானின் "நாம் தமிழர்" ஈழப் போராட்டம்கரை வேட்டிகள் ஈழத்தை மறந்தாலும் கனல் குறையாமல் இன்னும் ஈழ நினைவாகவே இருக்கிறார் சீமான். முள் வேலிக்குள் முடங்கிப்போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
எதிர்வரும் 18 ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் என்ற பெய‌ரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார் சீமான். 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டம். இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முள் கம்பிக்குள் அடைக்கப்பட்ட தமிழனின் அடிப்படை உ‌ரிமையை பெற்றுத்தர நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது.

நாம் தமிழர் என்பதை நிரூபிக்கும் வேளை இது. சீமானின் நாம் தமிழர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம்.


Sunday, June 28, 2009

பொடி வைத்து திரித்து பேசும் திமுக பாதர்.

நான் பதிவுலகிற்கு பழையவன் (வாசிப்பதில்)

எழுவது புதிது . (இதுவே முதல்)

நான் கணணி துறையில் வேலை பார்ப்பவன் . கணணி துறை சேர்ந்த பலர் இதுவரை மூன்று ஈழ போராட்டத்தை நடத்தியுள்ளனர். மூன்றிலும் நான் பார்வையாளராக பங்கேற்றுள்ளேன். முதல் போராட்டம் டிடேல் பார்க் இல் நடிகர்கள் சூர்யா மற்றும் அவரது தம்பி யோடு இணைந்து நடத்தப்பட்டது. இரண்டாவது போராட்டம் கோயம்பேட்டில் நடந்தது. மூன்றாவது போராட்டம்(கூடல் ) லயோலா கல்லூரியில் நடந்தது.

இந்த பதிவு , எதற்கெல்லாம் கூட்டம் சேருமோ அதற்காய் தன்னை அல்லது தனது முகத்தை பெரிதாய் காட்ட ஆசைப்படும் விளம்பர மற்றும் வியாபார பிரியரான அருள் தந்தை ஜெகத் காச்பேர் பற்றியது.

இந்த ஜெகத் காச்பேர் வேறு யாரும் இல்லை , இளையராஜாவை வைத்து , அப்போது மத்திய அரசில் செல்வாக்காக இருந்த வைகோ வை பயன்படுத்தி திருவாசகம் என்று ஒரு நிகழ்வை செய்தவர்.
அந்த நிகழ்வின் முடிவில் , இளையராஜாவால் "நாணயம் இல்லாதவர் " மற்றும் " கை சுத்தம் இல்லாதவர் " என்று பெயர் வாங்கியவர் என்பதாய் ஞாபகம்.


பின்பு கூட்வில் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்து அதில் தேர்தல் வேலையை செய்தவர் , யார் வெற்றி பெறுவார் யார் தோல்வி பெறுவார் என்று திமுகவிற்கு அனுகூலமான முடிவுகளை சொல்லி அதன் தலைமைக்கு நெருக்கமானார்.


பின்பு இவரது என்னமோ அல்லது கனிமொழியின் என்னமோ சங்கமம் உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் பற்றி இங்கே எழுதவில்லை ,

நாங்கள் நடத்திய இரண்டாம் கூட்டத்திற்கு பின்தான் இவர் எங்களுக்கு அறிமுகமானதை தெரிகிறது.

அப்போது (இரண்டாம் கூட்டத்திற்கு பின்) எங்களில் பலரை இவர் தனியே அழைத்து பேசுவார் . எந்த கட்சியும் ஈழத்தில் அக்கறை இல்லாதது போல் நைசாக பேசுவார். நமக்கு அரசாங்கத்தில் லோபி வேண்டும் என்பார். அரசாங்கத்தை எதிர்த்து ஒண்டும் செய்ய முடியாது என்று சொல்லுவார்.

பின்பு எங்களில் பலரை சங்கமம் கூட்டத்திற்கு அழைத்தார். ஈழ பிரச்சினைக்கும் சங்கமம் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

பின்பு தேர்தல் சமயத்தில் கனிமொழியை நேரடியாக வரவழைத்து சில கூட்டங்களை கூட்டி பார்த்தார். எதுவும் செல்லுபாடியாகவில்லை. இவரது தொந்தரவு தாங்காமல் இவர் பின்னால் இன்னும் சிலர் ஒட்டி கொண்டுள்ளார்கள் . அல்லது புலம் பெயர்ந்த தமிழர்கள் "ஏதாவது " தருவார்கள் என்று வெளிப்படையாக பேசும் சில பேர்களை வைத்து கொண்டு ஈழ நாடகம் ஆடி வருகிறார்.

ஈழ விசயத்தில் இன்னும் பாதர் நம்பிக்கை பெறவேண்டும் என்றால்.

  • திமுகவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
  • ஈழத்திற்காய் வரும் மாணவர்களை பாகுபாடு காட்டமால் நடத்த பழகி கொள்ள வேண்டும்.
  • சங்கமம் போன்ற அவரின் நிகழ்விற்கு அழைக்கும் அசிங்கமான செயலை விட வேண்டும்.
  • ஈழ விசயத்தில் அவரது நோக்கம் என்ன என்பதனை தெளிவாக கூற வேண்டும் .
  • அவர் அராம்பித்த "இன படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் " அமைப்பு என்ன செய்தது அல்லது என்ன செய்கிறது என்று கூற்ற வேண்டும். அதில் உறுப்பினராக உள்ள சில கட்சி அனுசரணை யானவர்களை பற்றி விளக்கம் கொடுக்க வேண்டும்.
  • கோயம்பேட்டில் நடந்த இரண்டாவது கூடலில் எதோ ஆரியர்களை திட்டுவதை கூறிக்கொண்டு பிற மதத்தினரை புன்பதுதுவதை விட வேண்டும்.
  • மிக முக்கியமாக தேர்தலுக்கு முந்திய நாள் இங்குள்ள அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் சில "ஈழ துரோகம் " செய்ததை போடி வைத்து பேசுகிறார். அது என்ன என்று இப்பொழுதே அனைவருக்கும் தெளிவாய் விளக்க வேண்டும். அல்லது இப்படி பேசுவதை அறவே விட வேண்டும்.
  • ஈழம் என்ற நல்ல விசயத்திற்கு கூடும் மாணவர்களை இளைஞர்களை திசை மாற்றி ஏமாற்றி திமுக விற்கு அனுசரணையாக செல்ல திட்ட மிட கூடாது . அல்லது திமுக எதிர்ப்பு நிலையை மட்டுபடுத்தகூடாது . இந்த விசயத்தில் அவரின் விளக்கம் வேண்டும்.
  • ஏன் திமுக அரசியல்வாதிகள் போன்றவர்களோடு அரசியல் நெருக்கம் காட்டுகிறீர்கள் என்றால் , அமெரிக்கா மற்றும் கனடாவில் தன் மீது வழக்கு உள்ளதையும் அங்கே போனால் கைது செய்யபடுவாராம் . விடுதலை புலிகளுக்கு உதவிய குற்றத்திற்காக இவரை கைது செய்ய இரண்டு நாடுகளும் வலை வீசி தேடுகிறதாம் . அதனால் தான் இங்கே திமுக அரசாங்கத்திற்கு நெருக்கமாய் இருந்து தாபித்து கொண்டு இருக்கிர்றாராம். அமெரிக்கா விற்கும் கனடாவிற்கும் தமிழக அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை . மற்றும் இந்த விஷத்தை தெளிவு படுத்த வேண்டும்.

ஐயா பாதர் அவர்களே ஈழத்தில் நாங்கள் எத்தனையோ துரோகங்களை பார்த்தாகிவிட்டது . நீங்கள் உண்மையாய் இருங்கள் அல்லது ஈழ விஷத்தை விட்டு விடுங்கள்.

-அலெக்ஸ் மத்தெஉ